Tuesday, December 02, 2008

476. வல்லரசு என்றொரு கனவு- கி அ அ அனானி

195 பேர் படுகொலை ,300 பேர் காயம் என்று முடிந்து விட்டது மும்பை பயங்கரம்। இதுவும் கடந்து போகும் என்றும், இந்தியனின் குறிப்பாக மும்பய்கரின் எதையும் தாங்கும் இதயத்தையும், பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழும் திறத்தையும், பாராட்டியும் துதிபாடியும் எழுதுவதும் பேசுவதும் ஒளிபரப்புவதும் தொடங்கியாகி விட்டது.ஆனால் உண்மை என்ன? இந்தியாவில் எந்த இடத்தில் இது போல் நடந்தாலும் மறுவினை இதைத்தவிர வேறாகவா இருக்கிறது ? கொதித்தெழுவதற்குப் பதிலாக இதே மெளனமும்,சகித்தலும், அடுத்த தாக்குதல் வரை மறத்தலும் தானே நம்மிடமிருந்து பதிலாக வெளிப்படுகிறது. பொறுமையும், சகிப்புத்தன்மையும், எதையும் தாங்கும் இதயத்தையும் கொண்டதாலா இந்தியர்களாகிய நாம் கொதித்தெழவில்லை? அதானால் தானா, எதுவுமே நடவாதது போல் பாவனையுடன் மறுநாள் விழித்து தத்தம் வேலைகளைக் கடமை மிக்க கர்ம வீரர்களாய் தொடங்கி விடுகிறோம்? ஒருக்காலும் இல்லை.

உண்மை என்னவென்றால் நம்மால் ஆகக்கூடியது எதுவும் இல்லை எனும் கையாலாகாததனத்தால் தான், இதன் பொருட்டு உருப்படியாக செய்ய ஏதும் தோன்றாதபோது மந்தைகள் போல் தினமும் செய்வதையே தொடர்ந்து செய்வோம் என்று தினப்படிகளில் நம்மை ஒளித்துக் கொள்ள முயல்கிறோம். எத்தனை வெடிகுண்டுகள் வெடித்தாலும்,எவ்வளவு துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நம்மால் ஆகக்கூடி முடிந்தது பயத்துடன் டிவி பார்ப்பதும்,பேப்பர் படிப்பதும் ,அங்கும் இங்கும் தொலைபேசி நாம் போகும் பாதையில் பயமொன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின் மறுநாள் எதுவுமே நடக்காத பாவனையுடன் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு தினசரி அலுவலில் மூழ்கிவிடுவதுதான்.

ஏன் இப்படி? எதனால் வந்தது இந்த விட்டேற்றித்தனம்? யார் காரணம் நமது ஒட்டு மொத்த சமூகப் பொறுப்பின்மைக்கு ? ஆங்கிலத்தில் Impotence என்று இதற்கு பெயர். ஏனென்றால் இன்னும் ஒரு முறை நமது கையாலாகததனத்தை இந்த உலகம் காண ஒரு கொடூரம் மும்பையில் அரங்கேற்றப்பட்டுள்ளது। இந்த வெறி நாய்கள் நமது நாட்டைத்தாக்கி ,நமது சக இந்தியர்களைக் கொன்றழித்தும் நம்மால் செய்ய முடிந்த ஆகக்பெரிய காரியம் என்னவென்றால் இன்னும் ஒருமுறை இதைப் போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகும் நாளை எதிர் நோக்கி பயத்துடன் காத்திருப்பது மட்டுமே என்று இந்த உலகுக்கு மற்றொரு முறை நாம் காட்டத் தான் போகிறோம் :-( கேள்விகள் கேட்பதில்லை, செயல்களில் இறங்குவதில்லை!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் மற்றும் பலரும் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வளர்ந்து வரும் நாடென்றும் வளர்ந்து விட்ட நாடென்றும் சிதம்பரம் முதலாய் மெத்தப் படித்தவர் பலர் மார்தட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர். சந்திரனுக்கு ராக்கெட் விடுவோம், ஜிடிபி வளர்ச்சி 9 சதமென்றும், ஐடி துறையில் எங்களை அடித்துக் கொள்ள ஆளில்லையென்று பீற்றிக்கொள்வோம். கிரிக்கெட்டில் இன்றைய சூப்பர் பவர் நாமென்ற மமதையுடன் மார் தட்டிக் கொள்வோம். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடும், G-8ல் சேரப் போகும், நாளை பொருளாதார வல்லரசாக மாறப் போகும் எங்களை மூன்றாம் உலக நாடென்றால் எங்களுக்கு பெருங்கோபம் வந்து விடும்!

ஏன் தெரியுமா? ஏனென்றால் உண்மை சுடும்.ஏனென்றால் நாம் மூன்றாம் உலக நாடு மட்டுமல்ல சொந்தக் குடிமக்களுக்கே உயிருக்குப் பாதுகாப்பு தர முடியாத,உடமைகளுக்கு உத்தரவாதம் தர முடியாத ஐந்தாம் தர நாடு (Fifth world nation) என்று சொன்னாலும் மிகையில்லை. மும்பையில் மற்றும் ஒரு முறை பயங்கரவாத நாடகம் அரங்கேறியிருக்கும் இவ்வேளையில் நமது நாடு வல்லரசாகும் என்று சொல்லும் அனைவரையும் கேட்கிறேன்? நமக்கு வல்லரசாக அட்லீஸ்ட் வளர்ந்து விட்ட நாடாக ஆசைப்படும் தகுதியாவது இருக்கிறதா?

வல்லரசென்றும் வளர்ந்து விட்ட நாடென்றும் சொல்லப்படும் அமெரிக்காவிலும் 9/11 என்று சொல்லப்படும் அதிபயங்கரவாதச் செயலில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன। அதுவும் கூட அளவிலும் சரி, தீவிரத்திலும் சரி, செயல்படுத்தப்பட்ட முறையிலும் சரி யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனையும் பயத்திலாழ்த்திய, அசைத்துப் பார்த்ததொரு நிகழ்வுதான்। ஆனால் அதன் பின் அமெரிக்கா செய்ததென்ன? விக்கித்து நிற்பதை விட உடனடியாக செயல்பட்டார்கள்.அதிலிருந்து பாடம் கற்றார்கள்.

சொந்த மண்ணில் வாழும் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.இதற்க்காக கோடிக் கணக்கான டாலர்களை கொட்டியிறைத்தார்கள். இன்னும் ஒரு முறை இது மாதிரி நடக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டார்கள். ஏனென்றால் ஒரு வல்லரசு அல்லது வளர்ந்த நாடு இதைத்தான் செய்யவேண்டும். செய்யும். இது மட்டுமா? இவை அனைத்தையும் செய்து கொண்டிருந்த அதே வேளையில் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்களின் தலை மேல் குண்டு போட்டார்கள், அவர்களை ஓட ஓட விரட்டினார்கள், இராக்கின் மேல் படையெடுத்து சதாமைத் தூக்கிலேற்றினார்கள். அவர்கள் செய்தது அனைத்தும் சரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதே நேரத்தில், மனித குலத்திற்கு நேரும் அநீதி பற்றியும், அமெரிக்காவின் அடாவடி மற்றியும் அனைத்து மனித உரிமைக் காவலர்களும் "ரத்தக் கண்ணீர்" வடித்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்த போதிலும் அமெரிக்க எனும் வல்லரசு,வளர்ந்த நாடு உலகுக்கு ஒரு செய்தியை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தது. யாராவது என்னை சீண்டினால், அதனால் என் நாட்டுக் குடிமகனுக்கு ஏதேனும் பாதிப்பென்றால் நான் அவர்களை அடிக்கும் அடியில் அவர்கள் இருக்கும் இடம் கூடத் தெரியாது".அவர்கள் ஆப்கானுக்கும், ஈராக்கிற்கும் ஏன் ஒட்டு மொத்த உலகுக்கும் உரத்துச் சொன்னது இதுதான். "நாங்கள் நாய்கள்தான் ,ஆனால் வேட்டை நாய்கள், எங்களை சீண்டினால் நீ சர்வநாசம்".

ஆப்கானிற்கும் ஈராக்கிற்கும் இதைச்சொல்லி ஏழு வருடமாகி விட்டது. இன்றுவரை அல்கைதாக்களும், தலிபான்களும் இன்னபிற இஸ்லாமிய அடிப்படை மதவாத அமைப்புகளும் அமெரிக்காவில் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியவில்லை என்பது கண்கூடு. இதுதான் ஒரு வல்லரசு / வளர்ந்த நாடு செய்ய வேண்டியது/செய்யும். இன்றைய அமெரிக்கரும் ஏறும் விலைவாசி, பங்கு வர்த்தக வீழ்ச்சி, சப் பிரைம் பிரஸ்சினை என எவ்வளவோ விஷயங்களில் பயம் கொண்டு பொருளாதார அளவில் செயலற்றவனாக உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் நாட்டின் ஆணிவேரான உள்பாதுகாப்பு குறித்து அவ்வாறு உணரத் தேவையிருக்காத மனநிலையில் இருக்கிறார்!

அமெரிக்காவில் இப்போது கருத்தாடல்களும் , விவாதங்களும் நடக்கிறது 9/11 க்குப் பிறகு அமெரிக்காவின் செயல்பாடுகள் சரியா தவறா என்று. தனது/பிறர் இறையாண்மைக்கு ஏற்றதா? இன/மத ஒடுக்கு முறையா? ஆதிக்கவாதமா? ஞாயமா என்றெல்லாம். அவற்றிலிருந்து பாடங்களும் பெறப்படும். ஆனால், முதலில் செயல்பாடு அவசியமானது என்பது அமெரிக்கர்களின் நிலைப்பாடு! ஆனால் செயல்பாட்டுக்குப் பிறகு இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் என்றாவது நமக்கு வாய்க்குமா? வாய்ப்பே இல்லை, ஏனெனில், நமக்குத் தான் செயல்பாடே கிடையாதே? அதனால் (மீடியாக்களிலும், இணையத்திலும்) காற்றில் பேசுவது மட்டும்தான், நமக்கு ஆகக் கூடிய ஒரே விசயம்!

....தொடரும்
--- கி.அ.அ.அனானி

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test....

SurveySan said...

////காற்றில் பேசுவது மட்டும்தான், நமக்கு ஆகக் கூடிய ஒரே விசயம்!///

செயல்பாட்டைச் செய்ய இன்னா பண்ணணும்னு கி.அ2 வ கேட்டு சொல்லுங்களேன்.

தாய்லாந்தில் கூட, மக்கள் அடிக்கடி கொதிச்சு எழறாங்க. நாம, பொட்டிப் பாம்பா, சீரிக்கினே இருக்கோம். கொத்த மாட்றோம்.

dondu(#11168674346665545885) said...

இஸ்ரேலை பற்றிய எனது இந்தப் பதிவில் நான் எழுதிய்து இங்கும் பொருந்துவதாக நான் நினைக்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3_30.html

“1972 ஒலிம்பிக் போது 11 இஸ்ரேலியத் தடகள வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர். அது பற்றி இந்தியாவின் கருத்துக் கேட்கப் பட்டபோது இந்தியத் தொடர்பு அதிகாரி ஒன்றுமே பேசாமல் தோள்களைக் குலுக்கினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலியர் ஒரு பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் முகாமைத் தாக்கியப் போது மட்டும் அதே அதிகாரி உரக்கவே தன் ஆட்சேபத்தை வெளியிட்டார்.

ஜூலை 1976. ஓர் ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!

எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

இரு வேறு நிலைப்பட்ட தீவிரவாத பிரச்சினைகளை அலசுகிறீர்கள் என நினைக்கிறேன்.அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தாக்கியதிலும்,பின் தனது பார்வையை ஈராக்கின் பக்கம் திருப்பியதையும் இந்திய-பாகிஸ்தான் கண்கொண்டு பார்ப்பது தவறு.ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்குப் பிறகு லண்டன் தீவிரவாதம் தலைதூக்கியது.ஏன் அதே தீவிர யுத்தம் நேட்டோ நாடுகளால் பாகிஸ்தான் மீது திரும்பவில்லை?காரணம் ஆப்கான் மீது போர் தொடுத்தது போல் அல்லாமல் பாக்.மீது செய்ய இயலாத படி அந்நாட்டின் தேச பூகோள அமைப்பு மற்றும் அமெரிக்கா பாலூட்டி வளர்த்த அணு பாம்பு திரும்ப கொத்தும் என்பதால்.

ஈராக் யுத்தம் ஒன்றும் ஜார்ஜ் புஷ் நினைத்தமாத்திரத்தில் செயல்படுத்தவில்லை.செத்த பாம்பை அடிப்பது போல் வளைகுடா யுத்த காலமான 1990 துவங்கி பொருளாதாரத் தடை,முக்கிய ராணுவ தளவாடங்கள்,பாதுகாப்பு அரண்களையெல்லாம் மெல்ல மெல்ல சீர்குலைத்து 2002 வரையிலான ஈராக்கின் ஆக்கிரமிப்பு எண்ணைக்கு உணவு கொள்கை வரை நீடித்தது.

இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையை மேற்சொன்ன அளவுகோலில் அளப்பது சரியானதல்ல என்பது எனது கருத்து.

said...

எ அ பாலா

பதிவை பதிப்பித்தமைக்கு நன்றிகள்

பதிப்பிக்கப் போகும் இரண்டாம் பகுதிக்கும் சேர்த்து.

கி அ அ அனானி

said...

சர்வேசன்

கருத்துக்கு நன்றி. செயல்பாட்டை நான் மட்டும் சொல்லணுமுன்னா எப்படி? சில கருத்துக்கள் இரண்டாம் பகுதியில்.நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்களோ அதையும் பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.

கி அ அ அனானி

said...

டோண்டு ராகவன்
தனது நாட்டிற்கு எதிராக நடக்கும் தீவிரவாதத்திறு இஸ்ரேல் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத்தக்கவாறு பொருந்தினாலும் இஸ்ரேலின் அரசியல் நிலைமையோடு இந்திய நிலைமையை நேரடியாக ஒப்பிட முடியாது என்பதாக நான் நினைப்பதால் இஸ்ரேல் பற்றி குறிப்பிடவில்லை.

நன்றி

கி அ அ அனானி

said...

ராஜ நடராஜன்

தேச மக்களின் பாதுகாப்பிற்கு தீங்கென்ற உடன் வல்லரசான அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளின் தன்மையை சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.ஒப்பிட்டு அதே தாக்குதல் நடவடிக்கைதான் நாமும் எடுக்கவேண்டும் என பரிந்துரைக்கவில்லை.அமெரிக்கா பின்னர் பாதுகாப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், உடனடி துரித தாக்குதலில் ஈடு பட்ட வேகத்தையும் (ஆப்கானில்) பாருங்கள்.

//ஈராக் யுத்தம் ஒன்றும் ஜார்ஜ் புஷ் நினைத்தமாத்திரத்தில் செயல்படுத்தவில்லை.செத்த பாம்பை அடிப்பது போல் வளைகுடா யுத்த காலமான 1990 துவங்கி பொருளாதாரத் தடை,முக்கிய ராணுவ தளவாடங்கள்,பாதுகாப்பு அரண்களையெல்லாம் மெல்ல மெல்ல சீர்குலைத்து 2002 வரையிலான ஈராக்கின் ஆக்கிரமிப்பு எண்ணைக்கு உணவு கொள்கை வரை நீடித்தது.//

1990 முதல் இப்படி நீடித்து வந்த நிலைமை இரட்டை கோபுரம் சரிந்ததும் எப்படி துரிதமாகியது என்பது கண்கூடு.

கருத்துக்கு நன்றி

கி அ அ அனானி

said...

அநாநி போட்ட லிஸ்ட்டில் முதலில் அப்சல் குருமுகமதைத் தூக்கில் போடச் சொல்லிப் பாருங்கள். முதலில் அதைச் செய்து விட்டு நாட்டைப் பலப் படுத்தப் போகட்டும். இந்திய மக்களுக்கு இது தேவைதான். இந்நேரம் ஒட்டு மொத்த இந்தியாவில் நூறில் ஒரு பங்கு மக்களாவது சாலையில் வந்து அமர்ந்திருக்க வேண்டாமா? மன்மோகன் சட்டைக்காலரையோ டர்பனையோ பிடித்து உலுக்கியிருக்க வேண்டாமா? அதை விட்டு விட்டு மெழுகு வர்த்தி ஏற்றுகிறார்களாம் வெட்க்கம் கெட்டவர்கள் மெழுகு வர்த்தி, இதில் மெழுகுவர்த்தி கடைக்காரனைத் தவிர வேறு யாருக்கு என்ன லாபம்? எனக்குப் பின் வரும் வாக்கியங்களைக் கேட்டாலே கடும் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறது

மும்பைக்கர் ஸ்பிரிட்டே தனி (அப்படியானால் எவன் செத்தாலும் கவலைப் படாமல் தன் ஜோலியைப் பார்த்து விட்டுப் போவான் என்று அர்த்தம்)

மும்பையின் ஸ்பிரிட்டை எந்தத் தீவீர்வாதத்தாலும் நிறுத்த முடியாது (அப்படியானால் இன்னும் பத்து குண்டு போடு நாங்கள் தாங்கிக் கொள்வோம் என்று அர்த்தம்)

நாம் எல்லோரும் இந்நேரத்தில் ஒன்று பட்டு நிற்க வேண்டும் (முஸ்லீகளைப் போய் அடித்து விடக் கூடாது அவன் மட்டும் நம்மை அடிக்கலாம் என்று அர்த்தம்)

ஒற்றுமையே இப்பொழுது தேவை (காங்கிரஸ்காரனைப் பார்த்து ஏண்டா நாயே இன்னும் அப்சல் குருவைத் தூக்கில் போடவில்லை என்று யாரும் கேட்டு விடக் கூடாது)

தீவீரவாதத்திற்கு மதம் கிடையாது (இஸ்லாம் பற்றி பேசக் கூடாது என்று அர்த்தம்)

இப்படி உள்ளீடற்ற வெற்று வார்த்தைகளைக் கேட்கும் பொழுது அதீதமான கோபமும் வெறுப்பும் விரக்தியும் உருவாகிறது.

enRenRum-anbudan.BALA said...

அனானி,
கடும் கோபத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
//நாம் எல்லோரும் இந்நேரத்தில் ஒன்று பட்டு நிற்க வேண்டும் (முஸ்லீகளைப் போய் அடித்து விடக் கூடாது அவன் மட்டும் நம்மை அடிக்கலாம் என்று அர்த்தம்)
//
தவறாக போதிக்கப்பட்ட / செலுத்தப்பட்ட சிலர் பாக். உதவியுடன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதற்காக 'எல்லாரையும் அடிக்க வேண்டும்' என்று சொல்வதை ஏற்க முடியாது. அது எங்கு கொண்டு விடும் என்று உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் ! பிரிவினையை வளர்க்க வேண்டாமே...
எ.அ.பாலா

said...

இந்தப் “பிரிவினையை வளர்க்க வேண்டாமே” என்பதும் மற்றுமொரு மகா எரிச்சல் ஊட்டும் வாசகமே. யார் பிரிவினையை வளர்க்கிறார்கள் கஜினி, கோரி காலம் முதல் இன்று வரை யார் பிரிவினையை வளர்க்கிறார்கள். இந்தியாவில் வாழ விருப்பம் இல்லாத முஸ்லீம்கள் தாராளமாக பாக்கிஸ்தானுக்குப் போகலாம் என்று சொல்வது எப்படிப் பிரிவினை ஆகும். ஐயா என்னைக் குண்டு வைத்துக் கொல்லாதே நீ கேட்டு வாங்கிக் கொண்ட தேசத்துக்குப் போ என்று சொல்வது எப்படிப் பிரிவினை ஆகும்? ஒவ்வொரு அப்துல் கலாமுக்கும், ஒவ்வொரு ப்ரேம்ஜிக்கும் பதிலாக ஒரு கோடி முஸ்லீம்கள் இந்தியாவைக் கூறு போடக் காத்திருக்கும் பொழுது எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்.

அட ஒரு உதாரணத்திற்குத் தமிழ் இணையத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இங்கு எத்தனை தமிழ் முஸ்லீம்கள் எழுதுகிறார்கள் அதில் எத்தனை பேர் இது நாள் வரை தமிழ் இணையம் தோன்றியது முதல் இன்று வரை எத்தனை குண்டு வெடிப்புக்களை எத்தனை இஸ்லாமியத் தீவீர்வாததை , காஷ்மீரப் பண்டிட்களின் படுகொலையைக் கண்டித்து எத்தனை பேர் எத்தனை முறை எழுதியிருப்பார்கள் என்று கணக்குச் சொல்ல முடியுமா? ஆனால் இதே தமிழ் முஸ்லீம்கள் ஈராக்கில் சதாம் ஹுசைன் தூக்கில் போடப் பட்ட பொழுது கொதித்தெழுந்து கண்டித்து உர்வலம் போகிறார்கள் ப்ளாக் எழுதுகிறார்கள். இதில் யார் பிரிவினைவாதி என்று நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
*** EDITED ***.
இந்தியா மற்றொரு பிரிவினைக்குத் தயாராகி வருகிறது அந்தப் பிரிவினையைத் தூண்டிவிடுவது நிச்சயம் இந்துக்கள் அல்ல என்பது மட்டும் உறுதி

enRenRum-anbudan.BALA said...

//ஒவ்வொரு அப்துல் கலாமுக்கும், ஒவ்வொரு ப்ரேம்ஜிக்கும் பதிலாக ஒரு கோடி முஸ்லீம்கள் இந்தியாவைக் கூறு போடக் காத்திருக்கும் பொழுது எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்.
//
நீங்கள் சொல்வது அதீதமாக உள்ளது. 100 முஸ்லீம்கள் அல்லது 1000/10000முஸ்லீம்கள் பிரிவினையை விரும்புகிறார்கள் என்றால் ஏற்கலாம்! ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டினால், என்ன பதில் சொல்வது ????

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails